மரமும் பழைய குடையும்

பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது

மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும் - தஞ்சம்என்றோர்

வேட்டதுஅருள் முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள்!

கோட்டுமரம் பீற்றல் குடை.

- அழகிய சொக்கநாதப் புலவர்

சொல்பொருள்

  1. கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம்.
  2. பீற்றல் குடை - பிய்ந்த குடை.

ஆசிரியர் குறிப்பு

  1. அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர்.
  2. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களை இயற்றியவர்.
  3. இவர்தம் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு.

நூல்குறிப்பு

  1. தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள சிலேடைப்பாடல் ஒன்று பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.
  2. ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும்.
  3. இதனை, ‘இரட்டுறமொழிதல்' எனவும் கூறுவர்.
  4. இரண்டு + உற + மொழிதல் இரட்டுறமொழிதல்.
  5. இருபொருள்படப் பாடுவது.