ஆசிரியர் குறிப்பு

  1. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
  2. இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
  3. இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
  4. இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
  5. இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.

நூல்குறிப்பு

  1. இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
  2. இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன.
  3. ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன.
  4. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  5. இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர். திருக்குறள் ‘உலகப் பொதுமறை' எனப் போற்றப்படுகிறது.

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை

கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு. எடுத்துக்காட்டு : 2013 + 31 = 2044 அதிகாரங்கள் (கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)

    அன்புடைமை

  1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும். (71)
  2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு. (72)
  3. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு. (73)
  4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பென்னும் நாடாச் சிறப்பு. (74)
  5. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு. (75)
  6. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை. (76)
  7. என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம். (77)
  8. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று. (78)
  9. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
    அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. (79)
  10. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு. (80)
  11. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையும் கல்லாத வாறு.
  12. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
  13. கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
    கொள்ளார் அறிவுடை யார்.
  14. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.
  15. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.
  16. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்.
  17. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு.
  18. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்.
  19. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
    அற்குப ஆங்கே செயல்.
  20. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
    இனத்தியல்ப தாகும் அறிவு.
  21. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள.
  22. மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்.
  23. நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை.
  24. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்.
  25. ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாதது இல்.
  26. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
    இடைக்கண் முரிந்தார் பலர்.
  27. ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கு நெறி.
  28. ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
    போகாறு அகலாக் கடை.
  29. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
    உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
  30. பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
    பெண்டகையால் பேரமர்க் கட்டு.
  31. இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
  32. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
    காதலார் கண்ணே உள.
  33. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
    ஒண்தொடி கண்ணே உள.
  34. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
    தன்நோய்க்குத் தானே மருந்து.
  35. வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு.
  36. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
    உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
  37. அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு.
  38. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.
  39. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.
  40. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளியது உள்ளப் பெறின்.
  41. காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு.
  42. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியும் தன்னினும் முந்து.
  43. மதியும் மடந்தை முகனும் அறியா
    பதியின் கலங்கிய மீன்.
  44. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
    யாவுள முன்நிற் பவை.
  45. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
    அடிக்கு நெருஞ்சிப் பழம்.
  46. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை.
  47. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
    எழுவாரை எல்லாம் பொறுத்து.
  48. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.
  49. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
    அலகுடை நீழ லவர்.
  50. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்.
  51. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேம்என் பார்க்கும் நிலை.
  52. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
    வேண்டாது சாலப் படும்.
  53. ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
    நீரினும் நன்றதன் காப்பு.
  54. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
    இல்லாளின் ஊடி விடும்.
  55. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும்.
  56. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமும் சூழ்ந்து செயல். (461)
  57. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல். (504)
  58. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போல் போற்றாக் கடை. (315)
  59. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
    காமத்துக் காழில் கனி. (1191)
  60. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு. (595)
  61. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண். (421)
  62. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு. (422)
  63. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு. (423)
  64. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு. (424)
  65. உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
    கூம்பலும் இல்ல தறிவு. (425)
  66. எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
    அவ்வ துறைவ தறிவு. (426)
  67. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர். (427)
  68. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
    அஞ்சல் அறிவார் தொழில். (428)
  69. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
    அதிர வருவதோர் நோய். (429)
  70. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர். (430)
  71. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று. (941)
  72. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின். (942)
  73. அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (943)
  74. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து. (944)
  75. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (945)
  76. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய். (946)
  77. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும். (947)
  78. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல். (948)
  79. உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
    கற்றான் கருதிச் செயல். (949)
  80. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
    அப்பால் நாற்கூற்றே மருந்து. (950)