புறநானுற்றுப்பாடல்
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே.
புறநானுற்றுப்பாடல்
இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே
தனிப்பாடல் திரட்டு
கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண்.
ஆசிரியர் குறிப்பு
- இங்குக் குறிக்கப்படும் ஔவையார், சங்க கால ஔவையாருக்கு மிகவும் பிற்பட்டவர்.
- கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.
- புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு.
- இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.
- தனிப்பாடல்களைக் கற்பதனால், தமிழ்மொழியின் பெருமையையும் புலவர்களின் புலமையையும் சொல்லின்பம் பொருளின்பம் கற்பனைஇன்பம் முதலியவற்றையும் பெறலாம்.