6TH TAMIL TERM 1 UNIT 1 LESSON 3

வளர்தமிழ்

உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம். - பாரதியார்

என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய். - பாரதியார்

தொல்காப்பியம் தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும்.

தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ, ண, ஞ

இடஞ்சுழி எழுத்துகள் - ட , ய, ழ

தமிழ் : தொல்காப்பியம் : தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - தொல்:386

தமிழ்நாடு : சிலப்பதிகாரம் : வஞ்சிக்காண்டம் இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் - வஞ்சி:165

தமிழன் : அப்பர் தேவாரம் : தமிழன் கண்டாய் - திருத்தாண்டகம் : 23

இலக்கண நூல்கள் : தொல்காப்பியம், நன்னூல்

இலக்கியங்கள் : எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

அறநூல்கள் : திருக்குறள், நாலடியார்

காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை

பூவின் ஏழு நிலைகள் : அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்

மா : மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு

முத்தமிழ் : இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் ; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.

  1. வேளாண்மை : கலித்தொகை 101, திருக்குறள் 81
  2. உழவர் : நற்றிணை 4
  3. பாம்பு குறுந்தொகை-239
  4. வெள்ளம் பதிற்றுப்பத்து-15
  5. முதலை குறுந்தொகை-324
  6. கோடை அகநானூறு-42
  7. உலகம் தொல்காப்பியம், கிளவியாக்கம்- 56 திருமுருகாற்றுப்படை-1
  8. மருந்து அகநானூறு-147, திருக்குறள் 952
  9. ஊர் தொல்காப்பியம், அகத்திணையியல் -41
  10. அன்பு தொல்காப்பியம், களவியல் 110, திருக்குறள் 84
  11. உயிர் தொல்காப்பியம், கிளவியாக்கம்- 56, திருக்குறள் 955
  12. மகிழ்ச்சி தொல்காப்பியம், கற்பியல்-142, திருக்குறள் 531
  13. மீன் குறுந்தொகை 54
  14. புகழ் தொல்காப்பியம், வேற்றுமையியல் 71
  15. அரசு திருக்குறள் 554
  16. செய் குறுந்தொகை 72
  17. செல் தொல்காப்பியம், 75 புறத்திணையியல்
  18. பார் பெரும்பாணாற்றுப்படை, 435
  19. ஒழி தொல்காப்பியம், கிளவியாக்கம் 48
  20. முடி தொல்காப்பியம், வினையியல் 206


நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ வேண்டும்!
அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்!
சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்!
பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ………………..

புதுமை

பழமை

பெருமை

சீர்மை

2. ‘இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..

இடன் + புறம்

இடது + புறம்

இட + புறம்

இடப் + புறம்

3. ‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….

சீர் + இளமை

சீர்மை + இளமை

சீரி + இளமை

சீற் + இளமை

4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….

சிலம்பதிகாரம்

சிலப்பதிகாரம்

சிலம்புதிகாரம்

சில பதிகாரம்

5. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……..

கணினிதமிழ்

கணினித்தமிழ்

கணிணிதமிழ்

கனினிதமிழ்

6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்………….

பாரதிதாசன்

வாணிதாசன்

கண்ண தாசன்

பாரதியார்

‘மா’ என்னும் சொல்லின் பொருள் ………..

மாடம்

வானம்

விலங்கு

அம்மா