உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம். - பாரதியார்
என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய். - பாரதியார்
தொல்காப்பியம் தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும்.
தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ, ண, ஞ
இடஞ்சுழி எழுத்துகள் - ட , ய, ழ
தமிழ் : தொல்காப்பியம் : தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - தொல்:386
தமிழ்நாடு : சிலப்பதிகாரம் : வஞ்சிக்காண்டம் இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் - வஞ்சி:165
தமிழன் : அப்பர் தேவாரம் : தமிழன் கண்டாய் - திருத்தாண்டகம் : 23
இலக்கண நூல்கள் : தொல்காப்பியம், நன்னூல்
இலக்கியங்கள் : எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
அறநூல்கள் : திருக்குறள், நாலடியார்
காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை
பூவின் ஏழு நிலைகள் : அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
மா : மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு
முத்தமிழ் : இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் ; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.
நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ வேண்டும்!
அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்!
சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்!
பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!