மதுவிலக்கு

கேள்வி

மதுவிலக்கு என்றால் என்ன?. மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படுவது குறித்து விளக்குக.

மதுவிலக்கு அறிமுகம்.

  1. மதுவிலக்கு என்பது மதுவை உற்பத்தி செய்தல், சேகரித்தல், விற்பனை செய்தல் மற்றும் அருந்துதல் ஆகியவற்றுக்கு தடை விதித்தல்.
  2. மதுவிலக்கின் நன்மைகளை பொதுமக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  3. மதுவிலக்கு குறித்த கொள்கைகள் மற்றும் சட்டங்களை திறம்பட நடைமுறைப்படுத்துதல்.

அரசியலமைப்பில் மதுவிலக்கு.

  1. அரசு நெறிமுறை கோட்பாடுகள் விதி47 அடிபடையில் மக்களின் உடல் நலனுக்கு தீமையான போதை பொருட்கள் மற்றும் மது வகைகளை தடை செய்தல்.
  2. மது விலக்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநிலப்பட்டியயில் 51-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மதுவிலக்கு.

  1. குஜராத், பீகார், நாகலாந்து மற்றும் இலட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
  2. குஜராத் மாநினத்தில் 1960லும், நாகலாந்து மாநிலத்தில் 1989லும், பீகாரில் 2016லும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
  3. குஜராத் மற்றும் பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழர்பு ஏற்பட்டால், உற்பத்தியாளருக்கு மரண தண்டணை விதிக்கப்படும்.
  4. கேரளாவில் 3 நட்சத்திர விடுதிகள், மதுக்கூடங்கள், விமான நிலையங்களில் மதுவகைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  5. மணிப்பூர் குறிபிட்ட மாவட்டங்களில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தியுள்ளது.
  6. ஆந்திரபிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் மிசோரம் ஆகியவற்றில் பகுதி மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது.
  7. 2016 இல் உச்சநீதிமன்றம், நெடுஞ்சாலைகளை சுற்றி 500 மீட்டர் தொலைவில் மது விற்பனை செய்ய தடை விறித்தது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடவடிக்கைகள்.

  1. போதை பழக்கம் ஒழிப்பு மையங்கள்.
  2. கள்ளச் சாராயம் மற்றும் மதுவின் தீமைகள் குறித்த மாநிலம் தழுவிய விழ்ப்புணர்வு பிரச்சாரம்.
  3. பழைய மதுவிலக்கு குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு நிதி.
  4. உதவி அழைப்பு சேவை மைய எண் 10581.
  5. தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதிகள்.
  6. மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையரகம்.
  7. அண்டை மாநிலங்களில் இருந்து கள்ள மதுபானம் தடுப்பு நடவடிக்கைகள்.
  8. காந்தியடிகள் காவல் பதக்கங்கள்.

முன்னெடுப்புகள்.

  1. பதநீர் சந்தைப்படுத்தும் முன் முயற்சி.
  2. நீரா பானம் சந்தைப்படுத்தும் முன் முயற்சி.
  3. பயோ டீசல் உற்பத்தி.
  4. வெல்லப்பாகு உற்பத்தி கட்டுப்பாடு.
  5. தானிய அடிப்படையிலான கூடுதல் நடுநிலை ஆல்கஹால்.

நன்மைகள்.

  1. குற்றங்கள் குறையும்.
  2. குடும்ப வன்முறைகள் குறையும்.
  3. உடல்நலன் சுகாதாரம் மேன்மையடையும்.
  4. பொருளாதார இழப்புகளில் இருந்து குடும்பங்கள் மீளும்.
  5. சாலை விபத்துகள் குறையும்.

சவால்கள்.

  1. கள்ளச்சாராயம் பெருகும்.
  2. உயிரிடிப்புகள் அதிகரிக்கும்.
  3. அரசின் வருமானம் குறையும்.
  4. தனிமனித சுதந்திரம் பாதிப்பு.
  5. சுற்றுலாத்துறை பாதிப்பு.
  6. போதை பொருள் விற்பனை அதிகரிக்கும்.

முடிவுரை.

மதுவிலக்கு நடைமுறைகள் மிகவும் சிக்கலானது மற்றும் சவாலானது. இதனை சிறந்த முறையில் அமல்படுத்த வேண்டும்.