லோக் அதலத் நீதிமன்றங்கள்.
அமைப்பு:
- லோக் அதலத் என்பது மக்கள் நீதி மன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது ஒரு விரைவு நீதிமன்றம் ஆகும்.
- இவை காந்தியக் கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள் ஆகும்.
- மாற்றுமுறை குறைதீர் தீர்மாணத்தின் அடிப்படையில் எளிதான விரைவான நீதியை வழங்கும் அமைப்பு ஆகும்.
- முதல் லோக் அதாலத் 1982 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஜனாகத் என்ற இடத்தில் நடைபெற்றது.
சட்ட அந்தஸ்த்து:
- சட்டப்பணிகள் ஆணையச் சட்டம் 1987 அடிப்படையில் லோக் அதலத் அமைப்பிற்கு சட்ட அந்தஸ்த்து வழங்கப்பட்டது .
- உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாட்ட நீதிமன்றம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டப்பணிகள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
- ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு சமூகப்பணியாளர், ஒரு வழக்கறிஞர் ஆகிய 3 நபர்கள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.
NALSA
- NALSA என்பது தேசிய சட்டப்பணிகள் முகமை ஆகும் .
- இது சட்டப்பணிகள் ஆணையச்சட்டம் 1987 இன் அடிப்படையில் நலம்பர் 9, 1995 இல் அமைக்கப்பட்டது.
- தேசிய அளவில் விளிம்பு நிலை மக்களுக்கான இலவச, நியாயமான சுட்ட உதவிகளை ஒருங்கிணைக்கிறது.
- லோக் அதலத் நீதிமன்றங்களை அமைக்கிறது.
- ஊரக பகுதிகளில் சட்ட விழிப்புணர்வு முகாம்களை நடத்துகிறது.
லோக் அதலத் அதிகாரங்க
- நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், விசாராணைக்கு எடுக்கவிடாத வடிக்குகளை விசாரிக்கிறது.
- சிவில் நடைமுறை விதிகள் 1908 அடிப்படையில் சிவில் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரத்தை பெற்றுள்ளது.
- தனக்கான அதிகாரங்களை தானே வரையறை செய்தல்.
- இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைகள் 1973. அடிப்படையில் அதிகாரங்களை பெற்றுள்ளது.
- போக் அதவத் நீதிமன்ற நீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீல் செய்ய இயலாது.
லோக் அதலத் விசாரணைகள்
- திருமண பிரட்சனைகள்
- நில ஆக்கிரமிப்பு
- தொழிலாளர் பிரட்சனைகள்
- தொழிலாளர் இழப்பீடு
- வங்கிப்பணம் மீட்பு
- இதர சிவில் வழக்குகள்
- அனுமதிக்கப்பட்ட குற்ற வழங்குகள்
நன்மைகள்
- கட்டணங்கள் இல்லை.
- நீதிமன்ற கட்டணங்கள் செலுத்தியிருந்தால் திரும்ப வழங்கப்படும்.
- நெகிழ்வு நன்மை கொண்ட விரைவான நீதி.
- நேரடியாக நீதிபதிகளிடம் பேச்சுவார்த்தை நடந்த இயலும்.
- லோக் அதலத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லாததால் விரைவான நீதி சாத்தியம்.
- மக்களுக்கு புரியும் மொழியில் வழக்குகள் விசாரிக்கப்படும்.
நிரந்தர லோக் அதலத்.
- சட்டப்பணிகள் ஆணையச் சட்டம் 1987 அடிப்படையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
- 2002 இல் இச்சட்டம் திருத்தப்பட்டது.
- பொது சேவைகள் தொடர்பான போக்குவரத்து, ரயில்வே, அஞ்சல் போன்ற வடிக்குகளை விசாரிக்கிறது.
சாதனைகள்
அக்டோபர் 2, 1996 இல் தேசிய அளவில் லோக் அதலத் நடத்தப்பட்டு 1 மில்லியன் வடிக்குகள் தீர்க்கப்பட்டது.
முடிவுரை
லோக் அதலத் மூலம் மக்களுக்கு விரைவான நீதியை வழங்கி நீரித்துறையின் மான்பை நிலைநாட்ட வேண்டும்.