6TH TAMIL TERM 1 UNIT 1 LESSON 1

இன்பத்தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்

- பாரதிதாசன்


  1. நிருமித்த - உருவாக்கிய
  2. விளைவு – விளைச்சல்
  3. சமூகம் – மக்கள் குழு
  4. அசதி – சோர்வு

பாரதிதாசன்

  1. பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.
  2. பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
  3. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார்.
  4. எனவே, இவர் “புரட்சிக்கவி” என்று போற்றப்படுகிறார்.
  5. இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
  6. இப்பாடல், ‘பாரதிதாசன் கவிதைகள்’ என்ற நூலில் ‘தமிழ்’ என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.

தமிழே! உயிரே! வணக்கம்!
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!
அமிழ்தே! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்!
தமிழே! உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்! இனிக்கும்!

- கவிஞர் காசி ஆனந்தன்

1. ஏற்றத் தாழ்வற்ற …………….. அமைய வேண்டும்.

சமூகம்

நாடு

வீடு

தெரு

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ………….. ஆக இருக்கும்.

மகிழ்ச்சி

கோபம்

வருத்தம்

அசதி

3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………

நிலயென்று

நிலவென்று

நிலவன்று

நிலவுஎன்று

4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….

தமிழங்கள்

தமிழெங்கள்

தமிழுங்கள்

தமிழ் எங்கள்

‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………

அமுது + தென்று

அமுது + என்று

அமுது + ஒன்று

அமு + தென்று

‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….

செம்மை + பயிர்

செம் + பயிர்

செமை + பயிர்

செம்பு + பயிர்


விளைவுக்கு – நீர்
வாழ்வுக்கு – ஊர்
இளமைக்கு – பால்
புலவர்க்கு – வேல்