CSIR: Council of Scientific and Industrial Research.
அறிமுகம்
- CSIR என்பது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
- CS1R அமைப்பு செப்டம்பர் 26, 1942 - இல் அமைக்கப்பட்டது.
- CSIR தலைமையிடம் புது தில்லி.
- இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஒருங்கிணைக்கிறது.
நிறுவனம்
- 37 தேசிய ஆய்வகங்கள்
- 39 எல்லை மையங்கள்
- 3 புத்தாக்க மையங்கள்
- 5 அலகுகள்
கட்டமைப்பு
- தலைவர் : பிரதமர் (பதவி வழி)
- துணைத் தலைவர்: ஒன்றிய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் (பதவி வழி)
- மேலாண்மை குழு: பொது இயக்குநர் தலைமையிலான குழு நிதி செயலாளர் பதவி வழி உறுப்பினர் இதர உறுப்பினர்கள் 3 ஆண்டு பதவிக்காலம்
- CSIR ஆலோசனைக் குழு: அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்த 15 அறிவியல் அறிஞர்கள்.
நோக்கங்கள்
- அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், மேம்படுத்துதல்.
- அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு என சிறந்த ஆய்வகங்கள் மற்றும் வசதிகளை செய்து கொடுத்தல்.
- அறிவியல் புதுமைகளுக்கு விருது வழங்கி ஊக்குவித்தல்.
- அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை திறம்பட பயன்படுத்துதல்.
- அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வு.
- இதழ்கள், கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிடுதல்.
- அறிவியல் மட்டுமல்லாது தொழில் துறையிலும் சிறந்த தரவுகளை தயாரித்தல்.
- அறிவியல் அறிஞர்கள் மற்றும் மாணர்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவித்தல்.
இலக்கு
2022 சர்வதேச அளவில் உள்ள அறிவியல் மேம்பாட்டிற்கு தேவையான அறிவியல் புத்தாக்கங்கள் மற்றும் தலைமைத்துவத்தை ஊக்குவித்து உள்ளார்ந்த பொருளாதார மேம்பாட்டை அடைதல்.
விருதுகள்
- சாந்தி ஸ்வருப்பு பட்னாக்கர் அறிவியல் தொழில்நுட்ட விருது.
- இந்த விருது 1952 - இல் இருந்து அறிவியல், தொழில்நுட்ட துறை சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது.
- டாக்டர் சந்தி ஸ்வருப் பட்னாக்கர் CSIR அமைப்பின் நிறுவனர் மற்றும் முதல் இயக்குநர் ஜெனரல்.
சாதனைகள்
- 1950 இல் வேதியல் முறையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் மருந்து மெத்தாகுவலான்.
- வாக்களிப்பிற்கான விரல் அடையாள மை.
- இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் டிராக்டர் ஸ்ராஜ்.
- பாதுகாப்புத் துறையின் பயன்பாட்டிற்கான பாதுகாப்பு கண் கண்ணாடி.
- அந்தமான் பழங்குடியளான் தோற்றம் குறிந்த ஆய்வு.
- டிரோசயில்லா மாதிரியை அடிப்படையாக கொண்ட கேன்சர் மருந்து.
- சராஸ் என்ற 14 இருக்கை கொண்ட விமானம்.
- மனித ஜீன் வரிசை பற்றிய ஆய்வு.
முன்னெடுப்புகள்
- கோவிட் 19:
- டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு.
- விரைவான மற்றும் பொருளாதார செலவு குறைந்த சிகிச்சைகள்.
- மருந்து, தடுப்பு மருந்து, பிளாஸ்மா சிகிச்சை.
- PPE மற்றும் பாதுகாப்பு கருவிகள்.
- மருந்து பொருட்கள் அளிப்பு வசதிகள்.
- பாதுகாப்புத் துறை:
- தேவூஸ் விமானங்களுக்கான ஹெட்-அப்-டிஃபிளே என்ற .மெய்நிகர் திரை வடிவமைப்பு
- ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்
- சூரிய மின்தகடு பொருத்திய மாதிரி மரங்கள்
- லித்தியம் அயான் மின்கலன்
- வேளாண்மை
- சம்பா மசூரி அரிசி வகை: பாக்டீரிய வாடல் நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது.
- ஆர்சனிக் பாதிப்பில்லாத முக்தா ஸ்ரீ அரிசி சாகுபடி
- வெள்ளை ஈக்கள் பாதிப்பில்லாத பருத்தி வகை
- சுகாதாரத்துறை
- GOMED: ஜினோமிக்ஸ் ஆன்டு ஞமிக்ஸ் டெக்னாலஜீஸ் பார் மெடிதல் டெசிசன்
- உணவு மற்றும் ஊட்டச்சத்து
- க்சீர் ஸ்கானர்- 10பைசா செலவீனத்தில் 45 நொடிகளில் பால் கலப்படத்தை கண்டறிதல்.
- இரும்புச் சத்து மற்றும் அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பு.
முடிவுரை:
CSIR அமைப்பு இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டின் முகமாக செயல்பட்டு வருகிறது.