தமிழ்நாடு முதலமைச்சர் தகவல் பலகை
அறிமுகம்
அரசின் முக்கிய தகவல்களை நிகழ்நேரத்தில் வழங்கும் முதலமைச்சர் தகவல் பலகை என்ற கட்டமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
நோக்கங்கள்
- தரவுகளை தாமதமின்றி பெறுதல்.
- திட்டங்களின் தாமதத்தை குறைத்தல்.
- விரைவாக முடிவெடுக்கும் திறனை அதிகரித்தல்.
- நம்பகத்தன்மை வாய்ந்த தரவு தளம்.
- சிறப்பான கணிப்புகளை உருவாக்குதல்.
கட்டமைப்பு
- நமிழ்நாடு மின்னாளுகை முகமை இந்த தகவல்பலகையை உருவாக்கியுள்ளது .
- செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனாலிசிஸ் தொழில்நுட்பம் பயன்வருத்தப்படுகிறது.
- 50 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு நிபுணர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு துறைகளுக்கும் தகவல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பம்சங்கள்
- செயற்கை நுண்ணரிவு தொழில்நுட்பம் மூலம் துல்லியமான தகவல்களை வழங்குகிறது.
- மழைப் பொழிவின் அளவு, தன்மை, முன்னெச்சிரிக்கை தகவல்.
- முக்கிய நீர் தேக்கங்களின் கொள்ளளவு நீர் இருப்பு.
- வேலைவாய்ப்பு களநிலவரம்.
- நுகர்பொருள் வாணிப தகவல்.
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் : முதலமைச்சரின் உதவி மையம் மூலம் பெறபட்ட மனுக்களின் நிலை மற்றும் தீர்வுகள்.
- சுகாதார திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள்.
- 85 வகைக்கும் மேற்பட்ட தானியங்கள்/காய்கறிகள் / பழங்கள் ஆகியவற்றின் விலை நிலவர கணிப்பு தளம்.
- குற்றச்செயல்கள் உட்பட்ட காவல் துறை தினசரி அறிக்கைகள்.
- கிராமபுற வீட்டுவசதி திட்டங்களின் நிலை.
- குடிநீர் விநியோகம் தொடர்பான தகவல்கள்
முடிவுரை
முதலமைச்சர் தகவல் பலகை அரசின் திட்ட செயல்பாடுகளின் திறனை சிறப்பாக மேம்படுத்த தெவுகிறது.