09-01-2024

அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டம்

முதல் அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டம் (1951 ஜூன்): சமூகம் மற்றும் கல்வி நிலையில் பின் தங்கியிருப்பவர்களின் முன்னேற்த்திற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுப்பதை 39 ஆவது சட்டபிரிவு தடை செய்யாது. வன்முறையைத் தூண்டுதல், வெளிநாடுகளுடனான நட்புறவைப் பாதித்தல் போன்ற வகையில் பேசுவது குற்றமாக்கப்படும் வகையில் பேச்சுரிமையின் 19-ஆவது பிரிவு மாற்றப்பட்டது. தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்தும் வகையில் 31ஏ பிரிவு திருத்தப்பட்டது. பார்லிமென்ட் மற்றும் சட்டப்பேரவை கூட்டங்களுக்கான இடைவெளி ஆறு மாதகாலத்திற்கு அதிகமாகக் கூடாது எனக் கூறும் வகையில் 85ம், 174ம் சட்டப்பிரிவுகள் திருத்தப்பட்டன. அதே போல் ஒவ்வொரு ஆண்டின் முதல் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்துவார் எனக் கூறும் திருத்தமும் செய்யப்பட்டது.

2-வது அரசியல் அமைப்புச் சட்டம் (1953, மே): 1951-ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களின் பாராளுமன்ற உருப்பினர்கள் எண்ணிக்கை திருத்தி அமைக்கப்பட்டது.

3-வது திருத்தம் (1955, பிபிரவரி): வாணிபம் மற்றும் உணவுப் பொருள் விநியோகம் போன்றவை மத்திய, மாநில அரசுகள் கூட்டு அதிகாரத்தினுள் கொண்டு வரப்பட்டது.

4-வது திருத்தம் (1955, ஏப்ரல்): அரசு பொதுக்காரியத்திற்கு என்று வாங்கும் நிலத்திற்கு அளிக்கப்படும் இழப்பீடு போதாது என்று கோர்ட்டுக்கு செல்வதை தடை செய்யும் வண்ணம் 31வது பிரிவு திருத்தப்பட்டது.

5-வது திருத்தம் (1955, டிசம்பர்): மாநிலங்களின் நிலப்பரப்பு, எல்லை ஆகியவற்றைப் பாதிக்கும் சட்டத்தை பாராளுமன்றம் இயற்றுவதற்கு முன் சம்மந்தப்பட்ட மாநில சட்டப்பேரவையில் அது பற்றி விவாதிக்க போதிய காலம் அளிக்கப்பட வகை செய்யப்பட்டது.

6-வது திருத்தம் (1956, செப்டம்பர்): மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தின் மீது மைய அரசு வரிவிக்க வகை செய்யப்பட்டது.

7-வது திருத்தம் (1956, அக்டோபர்): மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வகை செய்யப்பட்டது.

8-வது திருத்தம் (1960, ஜனவரி): பழங்குடியினர் தாழ்த்தப்பட்டோர் ஆங்கிலோ இந்தியர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

9-வது திருத்தம் (1960, டிசம்பர்) சில பிரதேசங்களை பாகிஸ்தானுக்கு அளிப்பதை அனுமதிக்கும் திருத்தம்.

10-வது திருத்தம் (1961, ஆகஸ்ட்): இந்திய யூனியனுடன் தாத்ரா நாஹர் ஹவேலி பகுதிகள் இணைப்பிற்கு வகை செய்யப்பட்டது.

11-வது திருத்தம் (1961, டிசம்பர்): துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் உரிமை பாராளுமன்றத்தின் இரு சபை உறுப்பினர்கள் அ"ங்கிய தேர்தல் குழுவிற்கு வழங்கப்பட்டது.

12-வது திருத்தம் (1962, மார்ச்): கோவா, டையு, டாமன் ஆகியவை இந்திய யூனியனுடன் இணைக்கப்பட வகை செய்தது.

13-வது திருத்தம் (1962, டிசம்பர்): நாகாலாந்து, இந்தியாவின் 16 ஆவது மாநிலமாக உருவாக்கப்பட வகை செய்தது.

14-வது திருத்தம் (1962 டிசம்பர்): யூனியன் பிரதேசங்களுக்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் மொத்த உறுப்பினர்கள் இருக்க வகை செய்யப்பட்டது.

15-வது திருத்தம் (1963, அக்டோபர்): உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்தியது.

16-வது திருத்தம் (1963, அக்டோபர்): பொது நன்மைக்காக அடிப்படை உரிமைகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பார்லிமென்ட், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை மதிப்பதாக உறுதிமொழி எடுக்க வகை செய்யப்பட்டது.

17-வது திருத்தம் (1964, ஜூன்): தனியார் சொத்துக்களை அரசு எடுக்கும் போது அப்போதைய சந்தை நிலவரப்படி இழப்பீடு அளிக்க வேண்டும்.

18-வது திருத்தம் (1966, ஆகஸ்ட்): பஞ்சாப், அரியானா மாநிலப் பிரிவினையை அனுமதித்தல்.

19-வது திருத்தம் (1966, டிசம்பர்): தேர்தல் வழக்குகளை விசாரிக்க நிறுவப்பட்ட தனி மன்றங்கள் அகற்றப்பட்டு அந்த விசாரணை அதிகாரம் உயர்நீதி மன்றங்களுக்கு அளிக்கப்பட்டது.

20-வது திருத்தம் (1966, டிசம்பர்): மாவட்ட நீதிபதி நியமனத்தை முறைப்படுத்தியது.

21-வது திருத்தம் (1967, ஏப்ரல்): எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.

22-வது திருத்தம் (1969, செப்டம்பர்): மேகாலயா மாநிலம் உருவாக்க வகை செய்தது.

23-வது திருத்தம் (1970, ஜனவரி): பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், ஆங்கிலோ இந்தியருக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு சலுகை அளிக்க வகை செய்தது.

24-வது திருத்தம் (1971, நவம்பர்): கோலக்நாத் வழக்கின் மீது எழுந்த பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டது. பாராளுமன்றத்திற்கு அரசியல் அமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்தும் உரிமை இருப்பதாக அறிவித்தகு. மேலும் இந்த திருத்தத்தின் படி குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதாவிற்கு கையெழுத்திட்டே ஆக வேண்டும்.

25-வது திருத்தம் (1972, ஏப்ரல்): பொதுக் காரியங்களுக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை பற்றிய வழக்குகள் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அப்பாற்பட்டவை ஆக்கப்பட்டது.

26-வது திருத்தம் (1971, டிசம்பர்): மன்னர் மானியம் ஒழிக்க வகை செய்தது.

27-வது திருத்தம் (1972, ப்ரவரி): இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மிசோரம், அருணாசலப் பிரதேசம் என்ற இரு மத்திய ஆட்சிப்பகுதிகள் உருவாக்கப்பட வகை செய்தது.

28-வது திருத்தம் (1972, ஆகஸ்ட்): ஐ.சி.எஸ் அதிகாரிகளின் சிறப்புச் சலுகைகள் அகற்றப்பட்டன.

29-வது திருத்தம் (1972, ஜூன்): கேரள மாநில நிலச் சீர்திருத்தச் சட்டம், நீதி மன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டவை என அறிவிக்கப்பட்டது.

30-வது திருத்தம் (1972, பிப்ரவரி): உயர்நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் தகுதி வரையறுக்கப்பட்டது.

31-வது திருத்தம் (1973, அக்டோபர்): லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கை 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது.

32-வது திருத்தம் (1974, ஏப்ரல்): மத்திய அரசு பல்கலைக் கழகங்களுக்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டது.

33-வது திருத்தம் (1974, ஏப்ரல்): 9 வது அட்டவணையில் மாநிலங்களின் நிலச் சீர்த்திருத்தச் சட்டங்கள் சேர்க்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டன.

35-வது திருத்தம் (1975, பிபிரவரி): சிக்கிம் இந்தியாவின் 22-வது மாநிலமாக உருவானது.

37-வது திருத்தம் (1975, மே): அருணாசலப் பிரதேசத்திற்கு சட்டப்பேரவையும், அமைச்சரவையும் அனுமதிக்கப்பட்டது.

38-வது திருத்தம் (1975): அவசரச் சட்டம் நெருக்கடி பிரகடனம் நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டது.

39-வது திருத்தம் (1975, ஆகஸ்ட்): குடியரசுத்தலைவர், துணைகுடியரசுத்தலைவர், பிரதமர், லோக்சபா, சபாநாயகர் தேர்தல் வழக்குகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிமன்ற அதிகார வரையறைக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டது. தனியொரு விசாரணைக்குழு விசாரிக்கும் 9-வது அட்டவணையில் மேலும் சில சட்டங்கள் இணைக்கப்பட்டன.

40-வது திருத்தம் (1976, மே): 9-வது அட்டவணையில் மேலும் சில சட்டங்கள், சொத்து, உச்சவரம்பு, கடத்தல்காரர்களின் சொத்து பறிமுதல், தவறான விஷயங்கள் பிரசுரமாவதைத் தடுத்தல், கடல்பரப்பின் எல்லைகள், ஆழ்கடல் கனிவளங்கள் பற்றியவை.

41-வது திருத்தம் (1976, செப்டம்பர்): பொதுப்பணித் தேர்வு ஆணைக்குழு உறுப்பினர்களின் ஓய்வு வயது 60லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டது.

42-வது திருத்தம் (1976, டிசம்பர்): ஒரு மினி அரசியல் அமைப்பு என்று கூறும் அளவிற்கு ஏராளமான அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட்டன. *சமயச்சார்பற்ற சோஷலிசம் என்ற சொற்கள் அரசியலமைப்பின் முகப்புரையில் இணைக்கப்பட்டது. அடிப்டைக் கடமைகள் இணைக்கப்பட்டது. * அரசியல் அமைப்பு திருத்தத்தில் பாராளுமன்றத்தின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. திருத்தங்கள் நீதிமன்ற அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டது. * அரசின் வழிகாட்டும் நெறிகள், அடிப்படை உரிமைகள் விட சக்தி வாய்ந்ததாக்கப்பட்டது. * குடியரசுத்தலைவர் அமைச்சரவை ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும். * கல்வித்துறை, மத்திய மாநில அரசுகளின் இணைப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. * மத்திய அரசு சட்டங்களை செல்லாது என்று கூறும் உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் உட்பட மற்றும் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. * ஆட்சித்துறை விசாரணை மன்றங்கள் நிறுவியது. * தேசத்துரோக செயல்கள் பிரிக்கப்பட்டு அவற்றை ஒடுக்க பாராளுமன்றம் சட்டம் இயற்றலாம்.

43-வது திருத்தம் (1978, ஏப்ரல்): உயர்நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிமன்ற அதிகாரங்கள் மீண்டும் அளிக்கப்பட்டது. தேசதுரோக செயல்கள் பற்றி பாராளுமன்றம் சட்டமியற்றலாம் என்ற 42-வது திருத்தப்பிரிவு ரத்து செய்யப்படும்.

44-வது திருத்தம் (1979, ஏப்ரல்): உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் சம்பந்தமான அரசு அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது. நெருக்கடி காலத்தில் திருத்தப்பட்ட அரசியல் அமைப்புகள் பல நீக்கப்பட்டது. சொத்துரிமை, அடிப்படை உரிமை பட்டியலிருந்து நீக்கப்பட்டது.

45-வது திருத்தம் (1980, ஏப்ரல்): பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், ஆங்கியோ இந்தியர் இட ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.

46-வது திருத்தம் (1983, பிப்ரவரி): மாநில அரசுகள் விற்பனை வரிவசூல் சம்பந்தமான குறைபாடுகள் நீக்கப்பட்டது.

47-வது திருத்தம் (1984, ஆகஸ்ட்): 9-வது அட்டவணையில் மேலும் 14 சட்டங்கள் இணைக்கப்பட்டு நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டது.

48-வது திருத்தம் (1984, ஆகஸ்ட்): பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஒராண்டிற்கு நீடிக்கப்பட வகை செய்தது.

49-வது திருத்தம் (1984, செப்டம்பர்): திரிபுரா மாநிலத்தில் மாவட்ட சுய ஆட்சி கவுன்சில்கள் செயல்பட அனுமதித்தது. 6வது அட்டவணை அம்மாநிலத்தில் அமல் செய்யப்பட்டது.

50-வது திருத்தம் (1984, செப்டம்பர்): ஆயுதப்படை, பாதுகாப்பு படை மற்றும் சி.பி.ஐ. அதிகார செயல்பாடுகளை கட்டுப்படுத்த பாராளுமன்றம் சட்டம் இயற்ற அனுமதித்தது.

51-வது திருத்தம் (1984): வடகிழக்கு மாநில சட்டப்பேரவைகளில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

52-வது திருத்தம் (1985, பிப்ரவரி): கட்சித் தாவல் தடை செய்யப்பட்டது.

53-வது திருத்தம் (1986, ஆகஸ்ட்): மிசோரம் மாநிலத்தின் தனி அந்தஸ்து உறுதி செய்யப்பட்டு அதன் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை நாற்பது ஆக்கப்பட்டது.

54-வது திருத்தம் (1986): தலைமை நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஊதியம் உயர்த்தப்பட்டது.

55-வது திருத்தம் (1986): அருணாசல பிரதேசம், 24 வது மாநிலமாக்கப்பட்டது. அதன் ஆளுநருக்கு சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட விசேஷ அதிகாரங்கள் வழங்கப்பட்டது.

56-வது திருத்தம் (1987): கோவா 25 வது மாநிலமாக்கப்பட்டது.

57-வது திருத்தம் (1987, செப்டம்பர்): நாகாலந்து, மேகாலயா, மிசோரம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

58-வது திருத்தம் (1987): இந்திய அரசியல் அமைப்பிற்கு அதிகாரப்பூர்வமான இந்தி மொழி பெயர்ப்பு வெளியிட குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

59-வது திருத்தம் (1988): உள்நாட்டுக் குழப்பம் காரணமாக பஞ்சாபில் நெருக்கடி நிலை அறிவிக்க அரசிற்கு அதிகாரம் ்ளித்தகு.

60-வது திருத்தம் (1988): நபர் ஒருவருக்கு ஆண்டு ஒன்றுக்கு தொழில்வரி ரூபாய் 250 லிருந்து 2,500 வரை உயர்த்தப்பட வகை செய்யப்பட்டது.

61-வது திருத்தம் (1989 மார்ச்): வாக்களிக்கும் வயது 21லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

62-வது திருத்தம் (1988): மேலும் பத்து ஆண்டுகளுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கும் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கும் இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டது.

63-வது திருத்தம் (1988): 59 வது திருத்தத்தை (பஞ்சாபில் நெருக்கடி நிலை) ரத்து செய்தது.

64-வது திருத்தம் (1990): பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க வகை செய்யும் திருத்தம், ஆனால் இத்திருத்தம் நிறைவேற்றப்படவில்லை.

65-வது திருத்தம் (1990): பவங்குடியினர் மற்றும் மலை சாதியினர் நலனுக்கு ஒரு தனி தேசியக் கமிஷன் உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.

66-வது திருத்தம் (1990): நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் அரசியலமைப்பில் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் கொண்டு வரப்பட்டன.

67-வது திருத்தம் (1990, அக்டோபர்): பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டது.

68-வது திருத்தம் (1991, மார்ச்): பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் நீட்டிக்கப்பட்டது.

69-வது திருத்தம் (1992, பிப்ரவரி): தில்லி தேசிய தலைநகர் ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.

70-வது திருத்தம் (1991, டிசம்பர்): தில்லி தேசிய தலைநகர் ஆட்சிப் பகுதியாக அறிவிப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது.

71-வது திருத்தம் (1992): நேரடியான பஞ்சாயத்து தேர்தல்களில் பழங்குடியினர் மற்றும் மலை சாதியினரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு ரிசர்வ் தொகுதியை ஒதுக்குவது, பெண்களுக்குத் தனித் தொகுதி ஒதுக்கீடு மற்றும் பஞ்சாயத்துகளின் பதவிக்காலம் குறித்தது.

73-வது திருத்தம் (1993): ஊராட்சி அமைப்புகளில் புதிய பொறுப்புகள் மற்றும் தேர்தல்கள் குறித்தது.

74-வது திருத்தம் (1993): நகர பஞ்சாயத்து, முனிசிபல் கவுன்சில் மற்றும் முனிசிபல் கார்ப்பரேசன் குறித்தது.

75-வது திருத்தம் (1994): மாநிலயளவில் வாடகைக் குழுக்களை நியமித்தல் தொடர்பானது.

76-வது திருத்தம் (1994): பிற்படுத்தப்பட்டோர் மலை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் இடஒதுக்கீடு குறித்தது.

77-வது திருத்தம் (1995): மலை சாதியினர் மறஅறும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது சம்மந்தமானது.

78-வது திருத்தம் (1995): ஒன்பதாம் அட்டவணைக்குள் இடப்பட்ட சட்டதிருத்தங்கள் செயல் முறைப்படுத்தப்படும் போது நீதிமன்றங்களின் இடையூறுகளுக்கு உட்படுகின்றன. இதைத் தவிர்ப்பதற்காக வழக்குகளின் பாதிப்பிற்கு உட்படாத வகையில் பல சட்டதிருத்தங்கள் ஒன்பதாம் அட்டவணைக்குள் சேர்க்கப்பட்டன.

79-வது திருத்தம் (1996): இதன்படி ஆறாவது அட்டவணையில் அசாமிலுள்ள இரண்டு மலைப்பிரதேச மாவட்டங்கள் அதிக சுயாட்சி கொடுக்கும் படியாக இணைக்கப்பட்டன. கார்பி, அங்லாங் மற்றும் வடக்கு கச்சார் மலைப்பகுதி (Karibi, Anglong and North Cachar Hills) சுயாட்சி கவுன்சில்களுக்கு கூடுதலான நிர்வாக சட்டமியற்றும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. இந்த மலைப்பகுதி சுயாட்சி கவுன்சில்களுடன் கலந்து மெலும் சில சுய முடிவு (Discretionary Power) அதிகாரங்களை செயல்படுத்த அசாம் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

80-வது திருத்தம் (2000): இதன்படி அரசியமைப்பின் 269, 270-ம் விதிகளின்படி மத்திய மாநில அரசுகளுக்கிடையே வரி பங்கீடு செய்து கொள்வதில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

81-வது திருத்தம் (2000): இந்த திருத்தத்தின்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினத்தவர்களுக்கும் தலைமை நீதிமன்றம் உறுதிப்படுத்திய வேலைவாய்ப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற கட்டுப்பாடு விலக்கப்பட்டது. இதனால் முந்திய வருடம் நிரப்பப்படாமல் இருக்கும் இட ஒதுக்கீடுகளும் அடுத்தவருடம் கண்க்கில் எடுத்துக் கொண்டு இடங்கள் நிரப்பப்படும்.

82-வது திருத்தம்(2000): இந்த திருத்தத்தின்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடியினத்தவர்களுக்கும் தேர்வு, வேலைவாய்ப்பு, பணிமேம்பாடு ஆகியவற்றில் மதிப்பெண் தகுதியினை தளர்த்துவதற்கும் மாநிலங்களுக்கு 355-ம் விதியின்படி எந்த இடையூறும் ஏற்படாமல் செய்யப்பட்டது.

83-வது திருத்தம் (2000): இந்த திருத்தத்தின்படி அரசியலமைப்பின் 243-வது விதி திருத்தப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தில் பஞ்சாயத்துகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. காரணம் அருணாச்சலப் பிரதேச மொத்த மக்கள் தொகையும் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களே ஆவர்.

84-வது திருத்தம் (2001): எம்.பி, எம்.எல்.ஏ., தொகுதிகளில் இந்தியா முழுவதும் மக்கள் தொகை சமநிலை இல்லாமல் வளர்ச்சியடைந்துள்ளது. இதனைப் போக்க 84-வது திருத்தம் வகை செய்துள்ளது. இதன்படி 1991-ல் மக்கள் தொகைக் கணக்கு அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமலும் தொகுதி எல்லைகளைத் திருத்தவும் மாற்றியமைக்கவும் (to readjust) இத்திருத்தம் வகை செய்தது.

85-வது திருத்தம் (2001): அரசு ஊழியர்களாகப் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன்த்தவர்களுக்கு, அரசு இடஒதுக்கீட்டின் சட்ட முறைப்படி பணிமூப்பு (Seniority) அடிப்படையில் பதவி உயர்வு கொடுக்க இந்த திருத்தம் வகை செய்கிறது. இது 1995 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதிலிருந்து அமுல்படுத்தப்படும்.

86-வது திருத்தம் (2002): குழந்தைகளின் கல்வி கற்கும் உரிமையை (Right to Education) அரசியலமைப்பில் சேர்ந்துள்ளது. இதற்காக அரசிலமைப்பின் 21-வது பிரிவில் புதிய 21-ஏ, என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநிலமும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும். மேலும் 45-வது பரிவும் மாற்றப்பட்டது. இதன்படி ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு குழந்தைக்கும் 6-வயது முடியும் வரை பராமரிப்பும் கல்வியும் அளிக்க வேண்டும்.

87-வது திருத்தம் (2003): இதன்படி அரசியலமைப்பின் 81,82,170,330 ஆகிய விதிகளில் காணப்படும் 1991-ஆம் வருடம் என்பதற்குப் பதிலாக 2001 என்பது சேர்க்கப்பட வேண்டும்.

88- வது திருத்தம் (2003): இந்தி திருத்தம் சேவை வரிதொடர்பாக செய்யப்பட்டது ஆகும். அரசியலமைப்பின் 286 பிரிவிற்குப் பிறகு 268(ஏ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்படி மத்திய அரசு சேவை வரி (Taxes on Service) விதிக்கும், பாராளுமன்ற சட்டத்தின்படி மத்திய அரசும், மாநில அரசும் அதை வசூல் செய்து தங்களுக்குள் பிரித்துக் கொள்ள வேண்டும். ஏழாவது அட்டவணையில் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களில் 92-சி என்ற பிரிவில் சேவைவரி சேர்த்துக் கொள்ளப்படும். மத்திய அரசு கெசட்டில் வெளியிட்ட நாள் முதல் இது நடைமுறைக்கு வரும்.

89-வது திருத்தம் (2003): இது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் தனித்தனியே அமைப்பது பற்றிய திருத்தமாகும். இதன்படி அரசியலமைப்பின் 338-ம் பிரிவின்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் என்பது அமைக்கப்படும் இதில் ஒரு தலைவர், உபதலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுவர். மேலும் 338(ஏ) விதியின்படி பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஒன்றும் அமைக்கப்படும். இதிலும் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவர், உபதலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இந்த இரண்டு ஆணையங்களும் தங்களுக்கு உண்டான செயல் முறைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் அதிகாரம் பெற்றுள்ளன.

90-வது திருத்தம் (2003): இதன்படி அரசியலமைப்பின் 332 வது பிரிவில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டது. அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் போடோ மாவட்ட நிலப்பகுதியில் அளிக்கப்பட்ட தொகுதிப்பிரதிநிதித்துவம் தொடர்ந்து நீடிக்க இத்திருத்தம் வகை செய்கிறது.

91-வது திருத்தம் (2003): இது அமைச்சரவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றியதாகும். இதன்படி 75-வது விதியில் இத்திருத்தம் சேர்க்கப்பட்டது. இதன்படி மத்திய அமைச்சரவையில் பிரதமர் உட்பட் அமைச்சர்களின் எண்ணிக்கை லோக்சபா மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது. இதே போல் 164-ல் விதியிலும் இந்த குறிப்பு சேர்க்கப்பட்டது. இதன்படி மாநில அமைச்சரவையும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் (கீழ்சபை) மொத்த எண்ணிக்கையில்லை 15 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது.

92-வது திருத்தம் (2003): அரசியமைப்பின் எட்டாவது அட்டவணையில் 3 எண்ணுக்குப் பதில் அந்த இடத்தில் 5 என்று போட வேண்டும். இதற்கு முன்பாக போடா. டொஹரி என்பதைச் சேர்க்க வேண்டும்.

93-வது திருத்தம் (2005): அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இடஒதுக்கீட்டில் SC.ST மற்றும் OBC பிரிவினருக்கு ஒதுக்கப்படும் இடங்கள் சம்மந்தமாக மாநில அரசே சட்டத்தை இயற்றிக்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது.

94-வது திருத்தம் (2006): பிகாரிலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கான அமைச்சரை ஆளுநரே நியமிக்கும் அதிகாரம் (Art 164-1) ன் படி வழங்கப்பட்டது. பிகாரிலிருந்து, சத்தீஸ்கர், ஜார்கண்ட் பிரிக்கப்பட்டது.

95-வது திருத்தம் (2003): 88 வது திருத்தத்தின்படி கொண்டுவரப்பட்ட Service tax Bill. பாராளுமன்றத்தால் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

96-வது திருத்தம் (2003): 96 வது திருத்த்தின்படி மக்களவைத் தொகுதிகளை 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2026 வரை மாற்ற என்ற திருத்தம் 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி என வரையறுக்கப்பட்டது.

97-வது திருத்தம்: 10-வது அட்டவணையில் உள்ள கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி -விதிமுறையை மீறும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை பதவி நீக்கும் அதிகாரம் வழங்குதல்.

98-வது திருத்தம்: இத்திருத்தத்தின்படி National Judicial Commission அமைக்கப்பட்டது.

99-வது திருத்தம்: Bodo land Territorial Council (BTC) ,2003-ல் கொண்டுவரப்பட்ட 90-வது திருத்தத்தில் சிலமாற்ரங்கள்.,மலைவாழ் மக்கள் உள்ள மாவட்டங்களில் நிர்வாகிகளாக மற்ற வகுப்பினரையும் நியமிக்கும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

100-வது திருத்தம்: அங்கிகரிக்கப்பட்ட தேசிய மொழிகள் 22 என சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

103-வது திருத்தம்: சிறுபான்மையினருக்காக தேசிய கமிஷன் (Repeal) மசோதா 23.22.2004 அன்று மக்களவையில் கொண்டுவரப்பட்டது.

104-வது திருத்தம் (2006): 93-வது திருத்த்தின்படி 2005 இல் கொண்டுவரப்பட்ட "Quota Bill" குடியரசுத் தலைவர் A.P.J.அப்துல்கலாம் அவர்களின் ஒப்புதலின் படி 20 ஜனவரி 2006 ஆம் ஆண்டு 104-வது திருத்தம் சட்டமாக்கப்பட்டது.

105-வது திருத்தம் (2006): This Constitution bill was (Art.164.1) came into effect 94th Amendment 2006.

106-வது திருத்தம் (2006): புதிதாக Part IX B சேர்க்கப்பட்டு புதிததாக (Art 243 ZH-243 ZT)சேர்க்கப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கென புதிய வரைமுறைகள் கொண்டுவரப்பட்டது.

107-வது திருத்தம் (2007): ஆறாவது அட்டவணையில் உள்ள மாநில தொடர்பான திருத்தப்பட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தால் அது நிராகரிக்கப்பட்டது.

108-வது திருத்தம்: மகளிர் இடஒதுக்கீடு மசோதா. 6 மே 2008 இல் ராஜ்யசபாவில் கொண்டுவரப்பட்டு 9 மே 2010 இல் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அங்கீகரிக்கப்பட்டது.

110-வது திருத்தம்: பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 1/3 பங்கு என்பதற்கு 1/2 பங்கு என மாற்றி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. (நிலுவையில் உள்ளது).

111-வது திருத்தம் (2011): கூட்டுறவு சங்கங்கள், சுதந்திரமாகவும், பணிநியமனம், ஜனநாயக முறைப்படி மேற்கொள்ளலாம் என அரசு நெறிபடுத்தும் கோட்பாட்டின்படி செயல்பட அந்தந்த மாநிலங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

112-வது திருத்தம்: ஊரகவளர்ச்சி முகமை மூலமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மற்றும் மகளிருக்கு இடஒதுக்கீடு.

113-வது திருத்தம்: எட்டாவது அட்டவணையில் உள்ளஒரியா என்ற மொழிக்கு ஒடிசா என்று மாற்றப்பட்டது.

114-வது திருத்தம்: உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வுபெறும் வயது 62லிருந்து 65 ஆக உயத்தப்பட்டது.