ஜவ்கார் என்பது அந்நியர்களால் தாங்கள் அவமதிக்கப்படுவதையும் கைப்பற்றப்படுவதையும், தவிர்ப்பதற்காக தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர போர்வீரர்களின் மனைவிகளும் மகள்களும் கூட்டாக தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நடைமுறையைக் குறிப்பிடுகிறது.
அக்பர் குழந்தை திருமணத்தைத் தடுத்ததுடன் திருமணத்திற்கு முன் மணமகன் மற்றும் மணமகளின் ஒப்புதலைப் பெற்றோர்கள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர் பெண்ணிற்கான திருமணவயது 14 எனவும் ஆண்களுக்கான திருமண வயது 16 எனவும் நிர்ணயித்தார்.
மதராஸ் தேவதாசி சட்டம் என்பது அக்டோபர் 9, 1947 - இல் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமாகும். மதராஸ் மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் தேவதாசிகளுக்குச் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்கியதுடன், இந்திய கோவில்களுக்கு பெண் குழந்தைகளைத் தானமாக வழங்குவது சட்டவிரோதம் எனவும் அறிவித்தது.
வங்காள ஒழுங்குமுறைச் சட்டம் XXI, 1804 | பெண்சிசுக்கொலை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது. |
ஒழுங்குமுறை XVII, 1829 | சதி எனும் பழக்கம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது. |
இந்து விதவைகள் மறுமணச்சட்டம், 1856 | விதவைகளை மறுமணம் செய்ய அனுமதித்தது. |
உள்நாட்டு திருமணச்சட்டம், 1872 | குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டது. |
சாரதா சட்டம், 1930 | சிறுமிகளுக்கான திருமணவயது சிறுவர்கள் உயர்த்தப்பட்டது. |
தேவதாசி ஒழிப்புச் சட்டம், 1947 | தேவதாசி முறையை ஒழித்தது. |